தேவி புராணத்தின் படி இதுவே நடந்தவையாக கருதப்படுகிறது .
காஷ்யப பிரஜாபதி என்னும் அரசனின் மகன் ஹயக்ரீவன் என்னும் அசுரன் தன்னை மனித தலை உள்ள யாராலும் அளிக்க முடியாது என்றும் குதிரை தலை உடையவனே தன்னை அளிக்க முடியும் சக்தி வேண்டும் என்று துர்கை தேவியிடம் வரம் வாங்கிவிடுகிறார் . பின் அவனது தீமை செயல்கள் உலகில் பெருகி விடுகிறது .அவன் ப்ரஹ்மரின் வேதங்களையும் அவர் மூக்கின் வழியாக வந்து திருடிவிடுகிறான் .அதை படித்து அழியாத நிலையை அடையவேண்டும் என்று எண்ணினான் .
உலகில் உள்ள அனைத்து தேவர்களும் ,உயிரினங்களும் விஷ்ணுவின் உதவியை நாடி தவித்து இருந்தனர் .
அப்போது பத்து தசாவதாரங்களையும் எடுத்து அசுரர்களை அளித்து விட்டு ஓய்வெடுத்து நித்திரையில் ஆழ்ந்து கொண்டிருக்கிறார் விஷ்ணு தேவர் .அவருடைய பணியை மேலும் தொடர்ந்து தீமையில் இருந்து உலகை காப்பாற்ற வேண்டும் என்று சிவன் மற்றும் ப்ரஹ்மர் விரும்பினார், அவரது ஆழ்ந்து நித்திரையை கலைப்பது பாவம் என கருதினார் ப்ரம்மர். விஷ்ணு தேவர் அவர் கைகளின் உள்ள வில்லின் மீது
சாய்ந்துகொண்டு நின்றிருந்தார் .அந்த
வில்லினை உண்பதற்கு சிறிய உயிர்களை உண்டாக்கினார் பிரம்மர் .அப்போது அந்து தடி விழுந்தால் அவர் சத்தத்தில் துயில் எழுந்து விடுவார் என்று எண்ணினார். ஆனால் அந்த வில்லின் ஒரு பகுதி விஷ்ணுவின் தலையை துண்டித்து விட்டது .
பார்வதிதேவியின் உதவியை நாடி முனிவர்கள் மக்கள் அவரை துதித்து காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினர். பார்வதிதேவி உலகில் நடப்பவை அனைத்தும் ஒரு காரணத்தாலேயே என்பதை கூறி ,விஷ்ணுவின் துண்டித்த தலையின் இடத்தில் குதிரையின் தலையை வைக்குமாறு க்கூறினர் , பின் குதிரையின் தலையை துண்டிக்குமாறு ப்ரஹ்மானிடம் கூறினார். அந்த குதிரைத்தலை விஷ்ணுவிற்கு பொருத்தப்பட்டது .அவர் பின் ஹயக்ரீவன் என்பவராக அவதரித்து ப்ரஹ்மரின் வேதநூல்களை திருடியதை அறிந்து, ஹயக்ரீவனை (அசுரனை)அளித்தார்.
மற்ற புராணங்களான பிரம்ம புராணம் ,விஷ்ணு புராணம் படி
மது ,காஷ்யப இருவரும் விஷ்ணுவின் காதிலிருந்து வந்த அசுரர்களாக கருதப்பட்டனர் ,அவர்கள் விஷ்ணுதேவர் ஹயக்ரீவ அவதாரத்தில் எழுதிய வேதங்களை திருடி கடலில் உள்ள ஹயக்ரீவ அசுரனிடம் போட்டுவிடுகின்றனர் ,அதை மீட்க விஷ்ணுதேவர் "மதுசூதன" அவதாரம் எடுத்து அவர்கள் இருவரையும் பன்னண்டு துண்டுகளாக அதாவது உலகின் பன்னண்டு தட்டுகளாக மாற்றிவிட்டார் .கடலினுள் இருந்த ஹயக்ரீவ அசுரனும் விஷ்ணுவின் ஹயக்ரீவ அவதாரத்தில் கொல்லப்பட்டான் .
ஏன் ஹயக்ரீவரை துதிக்க வேண்டும் ?
அறிவிற்கும் ஞானத்திற்கும் கல்விக்கும் அடையாளமான ஹயக்ரீவர்.
விஷ்ணுதேவர் எழுதிய நான்கு வேதங்களான ரிக், யஜுர்,
சாம ,அதர்வண வேதங்களை இயற்றியது இந்த அவதாரத்தில் தான் .விஷ்ணு தேவரின் இந்த அவதாரமானது
அறிவையும் ,ஞானத்தையும் தருகிற அவதாரமாகும் .சரஸ்வதி தேவிக்கும் கல்வியை அளிப்பவர் இவரே ஆவார்.இந்த அவதாரத்தில் வெள்ளை உடை அணிந்தும் ,வெள்ளை தாமரையின் மேல் அமர்ந்திருக்கும் ஹயக்ரீவ அவதாரத்தை வழிபாடுபவர்க்கு அறிவும் ,ஞானமும் நிச்சையும்
கிடைக்கும் .இவரது அருளில்லாமல் ஞானம் ஒருவற்கு முழுமையாக கிடைப்பதில்லை.
வழிபடும் மந்திரம்
அனைத்து மந்திரங்களையும் அர்த்தம் அறிந்து
உச்சரித்தல் வேண்டும்
ஹயக்ரீவர் மூல மந்திரம்
தியானம் செய்யும் போது இதை உச்சரிக்கலாம்
"உக்தீக ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோச்ந்த்ய
ஸர்வம் போதய போதய"
ஹயக்ரீவ காயத்ரி மந்திரம்
தினமும் காலை மாலை இதை உச்சரித்து வர ஹயக்ரீவரின் அருள் நிச்சையும் கிடைக்கும் .மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தினை அதனுடைய அர்த்தங்களையும் புரிந்தே உச்சரித்தல் வேண்டும் .
"ஓம் வாணீஷிஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தன்நோ ஹயக்ரீவ ப்ரசோதயாத் "
நன்றி
if you like my writings please go down comment below and subscribe for news letters
கருத்துகள்
கருத்துரையிடுக