காயத்ரி மந்திரம் - THE POWERFUL MANTRA OF THE UNIVERSE
hello! if you enjoy reading our blog or finding the contents useful please go below and comment your views as well as type your email on the left column and subscribe for news letters.
-all articles by admin ssg
hello! if you enjoy reading our blog or finding the contents useful please go below and comment your views as well as type your email on the left column and subscribe for news letters.
காயத்ரி என்னும் அடி அமைப்பு பெற்ற மந்திரம் காயத்ரி மந்திரம் . உதாரணமாக சிவன் காயத்ரி மந்திரம் ,கணபதி காயத்ரி மந்திரம்.இவை அனைத்தும் காயத்ரி அடி அளவுகோலின் படி அமையப்பெற்றுள்ளது .வேத மந்திரங்களில் மற்ற அளவுகோல்களும் உள்ளது அவை அனுஸ்துப் ,பிருஹத்தி ,பங்க்தி முதலியன .கவிதைக்கு எவ்வாறு சீர் ,அடி,உச்சரிக்கும்முறை ,ஓசை முக்கியமோ அதை போலவே இந்த மந்திரங்களும் அமைக்கப்பட்டு ,அதன் வித்தியாசத்தில் பிரிக்கவும் பட்டுள்ளன .
மிகவும் பொதுவான மந்திரம் காயத்ரி தேவிக்கு(சரஸ்வதி தேவிக்கு ) சமர்ப்பிக்கப்படும் மந்திரம் .புரிந்து கொள்ளுங்கள் காயத்ரி அடி அமைக்க பெற்ற மந்திரங்களுள் காயத்ரி என்ற பெயர் கொண்ட மந்திரம் .அந்த பெயர் சரஸ்வதி ,சூர்யன்,பார்வதி போன்ற தேவர்களை குறிக்கிறது
இதுவே அனைத்து மந்திரங்களிலும் சக்திவாய்ந்த மந்திரமாக
இதுவே அனைத்து மந்திரங்களிலும் சக்திவாய்ந்த மந்திரமாக
கருதப்படுகிறது .
gayatri mantra 10008 times chanting by 21 brahmins
காயத்ரி மந்திரத்தை இயற்றியவர் விஷ்வாமித்திரர் .இதை ரிக் வேதத்தில் காண இயலும் அனைத்து மந்திரங்களிலும் சக்தி வாய்ந்த மந்திரம் இந்த காயத்ரிமந்திரம் .காயத்ரி மந்திரம் அனைத்து தேவர்களுக்கும் பொதுவான மந்திரம் என்றும் சில குறிப்புகளின் படி இது காயத்ரி தேவிக்கு என்றும் சில சரஸ்வதி தேவிக்கு என்றும் சில காயத்ர என்பது சூர்யதேவனை குறிக்கிறது என்றும் ,சில பார்வதி தேவிக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொதுவான சமர்ப்பணம் இன்னும் கண்டுகொள்ளமுடியவில்லை .
இது குருமந்திரம் என்றும் கூறப்படுகிறது .கற்பனைக்கு அப்பாற்பட்ட இறைவனை நாம் துதிக்க கடினம் எனவே கடவுள் மனிதர்கள் உடலிலும் வாசிப்பார் .சிறந்த குறுகலான சத்குருக்களை நாம் தவறாமல் தொழுதால் வேண்டும் அவர்களின் கூற்றுப்படி நிற்க வேண்டும் என்பதையும் காயத்ரிமந்திரம் விளக்குகிறது .என்பதனால் இதை குரு மந்திரம் என்றும் கூறலாம் .இதை தினமும் காலையில் ஜெபிப்பர் .
வேதமந்திரங்கள் சக்தி யானது அதன் உச்சரிப்பையும் ஓசையையும் பொறுத்தே அமையப்பெறுகின்றன.எங்கே சுதியை ஏற்ற வேண்டும் எங்கே கூடாது என்பதற்கு ரிஷிகள் முக்கியத்துவம் கொடுப்பது அவசியம் இல்லையேல் எதிர்வினையை சந்திக்க நேரலாம் .எனவே வேத மந்திரகளை உச்சரிப்பதில் கவனம் வேண்டும் ..குறிப்பாக காயத்ரி மந்திரத்தின் சக்தியும் அதன்ஓசையும் ,உச்சரிப்பையும் பொறுத்தே உள்ளது .
இதை உச்சரிப்பதால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் என்றும் ,இதை பெண்கள் உச்சரிக்க கூடாது என்றும் சிலர் கூற்று .சில வேதங்களின் வழி நிற்பவர் மட்டுமே இதை ஜெபிக்க வேண்டும் என்றும் கூறுவார் .ஆனால் நூல்களின் படி அணைத்து மக்களும் ஜாதி மதம் வேறுபாடு இன்றி இதை கூறலாம் என்று குறிப்பிட்டுள்ளது , .
காயத்ரி தேவியே வேதங்களுக்கு கடவுளாகவும் ,தாயாகவும் கருதப்படுகிறார். சரஸ்வதி தேவியை கல்வி மற்றும் ஞானத்தை தருவர் இந்த மந்திரத்தை சரியாக உச்சரிப்பவர் தேவ நிலையையும் அடையலாம் என்று கூறப்பட்டுள்ளது .
இதன் அர்த்தத்தை நாம் அறிந்து கொண்டாலும் இதை சரியான இடத்தில் சுதியை ஏற்றியும் இறக்கியும் உச்சரிக்க வேண்டும் .இந்த மந்திரத்தின் சக்தி அதன் உச்சரிப்பிலும் அதனால் நாம் உணரும் ஓசையிலும் உள்ளது .
கடவுள் இருக்கிறார் என்பதை உணர்த்தும் மந்திரமாக இது விளங்குகிறது .
இந்தமந்திரத்தை படிப்பதால் ஞானம் கிட்டும் ,தீய சக்திகள் விலக்கிடும் ,மேலும் மரணமும் விலகி செல்லும் சக்தியை உடையது என்று கூறப்பட்டுள்ளது .
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக