சோதனைகளை கடப்பது எப்படி
சோதனை வாழ்க்கையின் ஆசிரியர் .
நல்ல வழியில் மட்டும் தான் நான் செல்கிறேன் என்று கூறுபவர்களை அடுத்த நிமிடம் காலம் அவர்களை சோதனைக்குள் உற்படுத்தி விடுகிறதா ?எப்பெர்ப்பட்ட சூழலிலும் நான் நல்லவனாக தான் இருபேன் என்று அவன் உறுதியாக நிற்கும் வரை, அதாவது அவன் கூறிய வார்த்தை உண்மை என்னும் வரை அவனது சோதனைகளமும் கொஞ்சம் கடினமாகவே இருக்கும், சோதனைகளை வென்ற அவனை பின் உலகம் ஏற்று கொள்ளும். நாம் நமது அறியாமையால் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் சூழ்நிலை தான் இந்த சோதனை.
சரி நாம் இப்பொது பொது வாழ்வில் எடுத்துக்கொள்வோம் ,ஒரு இளைஞன் அடுத்த தெருவில் உள்ள ஒரு கடைக்கு தனது வாகனத்தில் தான் செல்வேன் என்கிறான் அவனுக்கு சிலகாலங்களில் அந்த வாகனம் எதோ ஒருகாரணத்தால் இல்லாமல் போய்விடுகிறது .இதுவும் ஒரு சோதனை தான் இப்போதைக்கு
வாகனம் வரும் வரை நான் கடைக்கு செல்ல போவதில்லை என்று கூறுவதில்லை கடமையை உணர்ந்து பழக்க படுத்திக்கொள்வதும் உண்டு அதுவரை சோதனையும் விடுவதில்லை.இப்படித்தான் சோதனை நமது சக்தியை முழுவதும் பயன்படுத்தும் வரையும் அவற்றின் எல்லையை அறியாமல் இருக்கும் வரை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறது.தினமும் நடந்து செல்பவருக்கு வாகனம் இருந்தாலும் அதை ஒதுக்கி விட்டு நடந்தே சென்றால் அவரை எதுவும் பாதிப்பதில்லை.வாகனத்தின் மீது என்றும் சார்ந்தே இருந்த அந்த பழக்கத்தை , தேவையற்ற பற்று ,அறியாமை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
இதை தான் அந்த களங்களில் எந்த ஒரு நிலையற்ற பொருட்கள் மீது பற்று கொல்லாதே என்று கூறுவார்.
சோதனைகள் இருந்தால்தான் சாதிக்கவும் வாய்ப்புக்கிடைக்கும்.
நன்றாக படிப்பவர்க்கும், ஒன்றில் மட்டும் நன்றாக வேலைசெய்பவற்கும்,எதுவுமே செய்யத்தவர்க்கும் , சுகமான வாழ்க்கையை மட்டும் அனுபவித்தவர்க்கும், தீமையை மட்டும் செய்து வந்தவர்க்கும்,எதுவும் செய்யத்தவர்க்கும் அனைவருக்கும் ஒரு சோதனை வந்தவாரே இருக்கிறது , மனமுடைந்து கிடந்தாலும் சோதனைகள் நேரம் பார்த்து வருவதில்லை. இதை கண்டு அஞ்சுவது மூடத்தனம். நான் கூறியதுபோல் கர்மங்களை பொருத்தே நாம் சோதிக்கப்படுகின்றோம்.
வாகனத்தில் போபவர்களை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் ஒரு நல்ல உழைக்கும் இளைஞனுக்கு ஒரு வாகனம் பரிசாகவும் அழிக்கப்படலாம் .இது அவன் சோதனையில் வெற்றி பெற்ற பின்பே அதாவது விடாமுயற்சியுடன் நேர்வழியில் உழைத்து செல்வதை பெற்றதால் அவனுக்கு இதை கிடைக்கிறது.அதை அவன் தவிர்ப்பது வரும் சோதனைகளை தவிர்க்கலாம்.அது என்ன இந்த காலத்தில் கூட வாகனம் இல்லாமல் அவசரத்திற்கு என்ன செய்வது என்றாலும் ,வாழ்க்கையின் உண்மைத்தன்மையை அன்றய நமது முன்னோர்கள் அறிந்துஇருந்தனர் அவர்கள் கால்நடையில் மயில்கள் கடந்திருந்தனர் என்பதை நாம் மார்க்க முடியாதது .
நல்ல கர்மம் செய்தால் துன்பமே நிச்சையம் வராது. சோதனைக்காலம் நம் வாழ்வில் முடிந்து போகும்போது அதாவது நாம் சிலவற்றை இழந்தது, சிலபேர் ஆணவத்தையும் விட்டுவிடுவார்கள், கோபத்தையும் விட்டுவிடுவார்கள் இவை அனைத்தும் நிரந்தரமல்ல என்பதை புகட்டியே செல்கின்றன .
இந்த காலத்தை சனி காலம் என்று ஹிந்து தர்மம் கூறுகிறது .
சனி வந்தால் அவரவர்க்குரிய கர்மம் கிடைக்கும் என்பதை அழகாக விளக்குகிறது .
சனி தேவர் ஒருவர் செய்யும் குற்றத்தை பொறுத்தே அனைவரையும் துன்பத்துள் ஆழ்த்தி அதிலிருந்து நல்ல வழியை காட்டுகிறார் பாடத்தையும் புகட்டுகிறார்.
இதில் அவர் யாவர்க்கும் பாரபச்சம்பார்ப்பதில்லை .ஹரிச்சந்திரன் கதையை அறிந்தால் போதும் .
இதில் குறிபிடத்தக்கவை அவர் ஒருவர் மனம் திருந்தி வாழ்க்கையை கற்றுவிட்டால் அதற்குரிய நல்ல பலன்களையும் தருகிறார் .
நாம் அனைவருக்கும் எதிர்பார்ப்பில்லாமல் உதவினால் எவராவது ஒருவர் நமக்கு உதவுவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம் நிச்சயம் காலமே நமக்கு உதவும் .
கருத்துகள்
கருத்துரையிடுக