எண்ணங்களை கட்டுப்படுத்துவது எப்படி
நான் மனநல மருத்துவரும் அல்ல ஆனால் ஆன்மிகத்தின் வழி இயங்கி வந்த இந்த உலகத்தில் தற்போது தான் இதற்கான தேவை அதிகரித்துள்ளது ஆகவே..அதன் வழியில் இந்த தலைப்பை காணாலாம் ...
இந்த பாரதத்தின் ஆன்மிக குருகளால் பாரதத்தில் ஒற்றுமை அமைதி நிலவுகின்றன.இன்னும் சொல்லப்போனால் உலகம் எங்கும் இவர்களின் போதனைகள் பின்பற்றப்படுகின்றன இவர்களை தேடியே கண்டம் விட்டு கண்டம் மக்கள் பயணிக்கின்றனர்.இவர்களது பழைமை வாய்ந்த அறிவுரைகலைக்கு நவீனகாலம் மாற்றிக்கொள்வது உலகிற்கு பயன்தரும்.
அப்படி ஒரு ஞானி ஈஷா யோகத்தின் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் எண்ணங்களை பற்றிய ஆலோசனையை முதலில் உங்களிடம் கொண்டுசேர்ப்பது எனது கடமை.நான் முதல் கூறிய அந்த எண்ணங்களை பற்றியது சத்குரு ஜக்கி வாசுதேவின் கருத்து இது ,எண்ணங்கள் என்பது நம்மை அறியாமல் அதாவது நமது விழிப்புணர்வு இல்லாமல் தானாகவே உதயமாகும் ஒன்று.இதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது தீய எண்ணங்கள் தோன்றுகிறது என்று குற்ற உணர்வு வேண்டாம் .ஏன்னெனில் அவை நம் மனதின் விழிப்புணர்வின்றி தோன்றும்ஒன்று .அதற்கான குற்ற உணர்ச்சி தேவையற்றது.அந்த எண்ணங்களுக்கு மதிப்பளித்து செயல்களை செய்யாமல் இருக்க வேண்டாம் மன அழுத்தத்தை வளர்த்தி கொல்லாதீர்கள் .எண்ணங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று.
நமது எண்ணங்களை பற்றி தெரிந்துகொள்வதே அதை நாம் கட்டுப்படுத்தும் வழி. எண்ணங்கள் இடைவிடாத மூளையால் உரியப்படும் பிரபஞ்ச சக்தியாகும்.
நிமிடத்திற்கு நிமிடம் ஒரு யோசனை, நிமிடத்திற்கு நிமிடம் மனதின் எண்ண ஓட்டங்கள் மாறுகின்றன .இதை துன்பம் எனவும் நினைக்க
வேண்டாமே .இந்த கட்டுரையை எழுதும் அளவிற்கு நான் மிக பெரிய ஞானியாக இருக்க வேண்டும் ஆனால் நான் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன.
இதை ஆன்மீக வழிகளில் கீதையின் கூற்றில் இருந்து விளக்கவும் செய்யலாம் :
எண்ணங்களில் நல்ல என்னங்கள் தீய எண்ணங்கள் இருவகை உள்ளன இவை ஒருவரது ஆன்மாவில் கலந்து உள்ள குணங்களின் அளவை பொறுத்தே தோன்றுகின்றன.
ஆன்மாவின் மூன்று உறுப்புகள் :
மனம்
புத்தி
சமஸ்காரம்
மனம் தான் எண்ணங்களை தோற்று விக்கின்றன .
அந்த தோற்றுவித்த நல்ல அல்லது தீய எண்ணங்களை செய்யல் படுத்த வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிப்பது புத்தி ஆகும் .
மனம் ஏன் இவ்வாரு ஒருவற்கு நல்ல பெயரையும் இனொருவருக்கு கேட்ட பெயரையும் விளைவிக்க செய்கிறது ?
மனதையும் தாண்டி இருக்கும் சக்தி குணம் .
முதலில் குணம் மூன்று வகை படும் அவை ,
சாத்வீக
ராஜஸ
தாமஸ
ராஜஸ குணம் உடையவர்கள் தோற்கடிப்பது எளிதல்ல , மன அழுத்தம், கோபம், வெறித் தனம்,மற்றும் அமைதியின்மையை கொண்ட குணம் இந்த குணம் பிறவியிலேயே ஒருவரது ஆன்மாவில் எந்தளவிற்கு கலந்திருக்கிறது என்பதை பொறுத்தே அவர்களது குணம் அமையப்பெறுகிறது .இந்த குணமும் சாத்வீக குணமும் நமக்கு அன்றாட வாழ்க்கைக்கு அதாவது உழைப்பவர்கள் வாழ்க்கைக்கு தேவைப்படுகிறது .
தாமச குணம் என்பது மந்தமான, சோம்பல் மற்றும் அதிக தீய மற்றும் பிற உயிரை அளிக்கும் குணம் .இந்த குணம் ஒருவரது ஆன்மாவில் எந்தளவிற்கு கலந்திருக்கிறதோ அதை பொறுத்ததே இவரது இந்த பிறவி குணம் அமையப்படுகிறது .ராஜஸ குணம் அதிகம் அடைந்தாள் மந்தியான தாமச வாழ்க்கை அமைந்து விடும் .
இதுபோன்ற குணங்களை நாம் ஆன்மா பிறக்கும் பொழுது எதை உரிந்துகொள்கின்றனவோ அதுவேய உடலில் அதிகம் காணப்படும்.இருப்பினும் அதிக சாத்வீக செயல்களில் ஈடுபட்டுவந்தால் ராஜஸ தாமச குணங்கள் குறைந்துகொண்டேயப்போகும்.
ஒரு செயலை செய்ய தூண்டுவது மனம் என்றாலும் அதை செய்யலாமா வேண்டாமா என்று நம்மை சிந்திக்க வைப்பது புத்தியே ஆகும் .
→→→→→→→→→→→→→எண்ணம்,ஆன்மா ,புத்தி ,குணம் CLICK TO READ
எண்ணங்களை கட்டுப்பாட்டிற்குள் வைக்க ஒரே உதவியாளன் உடற்பயிற்சி, உடல் உழைப்பு,தியானம் என்று கூறுவதைவிட அவை நம்மது சுயநினைவுடன் நிகழ்வதில்லை ஆகவேய அதை பொருட்படுத்துவது தேவையில்லை .
→→→→→→→→→→→→→எண்ணம்,ஆன்மா ,புத்தி ,குணம் CLICK TO READ
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக