ஆன்லைன் கேமிங் விளையாட்டில் ஈடுபடுபவர்களின் மனம் நிஜத்தில் சந்தோஷமடைவதில்லை


        




  நமது முன்னோர்கள் மாயை காட்டும் கலைகளை கண்டு ரசிப்பதுண்டு ஆனால் அவர்கள் அதை விரும்பியதாக எந்த புராணங்களும் கூறவில்லை.மாயாஜால கலைகளின் உண்மை வெளிச்சமாகும் பொழுது அதை நம்பியவர்கள் தங்களது அறியாமையை கண்டு வெக்கம் கொள்வர்.அதே போல் தான் இந்த கேமிங் உலகம் என்பது என்னுடைய கருத்து.நமது  கல்வி இந்த துறையில்  வளராமல் இருக்கின்றது என்பதை இது உணர்த்துகிறது.ஆம் மனிதர்களின் இயற்கை குணமானது தன்னை பிறருடன் ஒப்பிட்டுக்கொள்வது மற்றும் தனிமையை போக்க சக மனிதர்களுடன் தொடர்பில் வைத்துக்கொள்வது. 

கேமிங் உலகம் என்பது இவ்வாறு தான் அந்த உலகத்தை உருவாக்கும் கல்வி அறிவு சிலரிடம் சென்றடைவதில்லை.சிலரிடம் அந்த கல்வி அறிவு இருப்பதனால் அதை விற்கும் நோக்கத்தில் யுக்திகளை பயன்படுத்துகின்றனர். இந்த கேமிங் உலகம் இன்னொருவரின் கற்பனை உலகத்தில் நமது நேரத்தை வீணாக்குவது அல்லது மாட்டிக் கொள்வது எனலாம்.

இந்த வரியை பின்தொடர்ந்தால்  தனி ஒரு பக்கம் தேவைப்படும்.இவ்வாறு உருவாக்கிய உலகத்தில் ஓயாமல் நாம் மனதை செலுத்தி தவம் செய்வதால் மனம் ஏதொன்று செய்து கொண்டு இருக்கும் திருப்தியை தருவது போல் தோன்றும்.ஆனால் நிஜத்தில் நிகழ்வது படபடப்பு,நிஜ உலகில் கூட உண்டாக்காத உணர்ச்சிகள் மற்றும்  பார்க்கும் விஷயங்களில் துவங்கி இரவில் கனவு வரை இந்த உலகம்  பின் தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒரு கற்பனை.

இதில் விளையாடுபவர்களின் மூளைக்கு அது நிஜமில்லை என்று தெரிந்தாலும் அவர்களது மனம்  அந்த சூழல் நிஜமென நினைத்து  கோபம் ,பயம் போன்ற உணர்வுகள் தங்களின் உடலை பாதிக்கும் அளவிற்கு  உணர்ச்சிகளை தூண்டும் ரசாயனங்களை அளவிற்கு அதிகமாக உடலில் சுரக்க மூளையை தூண்டப்படுகிறது .
 அன்றாடம் வாழ்க்கையின்  ஓய்வு ,மகிழ்ச்சி,நேரம் வீணாகிறது.விளையாடி  இருப்பவர்கள் ஒரு சில நாட்களுக்கு நிறுத்திவிட்டால் கோபம் ,படபடப்பு குறைந்திருப்பதை அவர்களால் உணர இயலும்.

  வெறும் ப்ரம்மையாக தோன்றும் சூழல்கலில் வாழ்பவர்களை சித்த  ப்ரம்மம் பிடித்து விட்டது என்று கூறுவோம் நாம் தெளிவாக இருப்பினும் இது போன்ற கற்பனை விளையாட்டுக்கு நமது மனதை சேர்த்து பயன்படுத்திக்கிறோம்.

 இல்லாத ஒன்றை கற்பனை செய்து மூளையை கசக்கி விளையாடும் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடி பின் விட்டுவிடாமல் அதற்கு அடிமையாகும் சூழல்களும் உருவாக்குகின்றன.இதற்கு பின் இருக்கும் உண்மை தன்மையான அந்த கல்வியை கற்றுக்கொண்டால் இது போன்ற அறியாமையில் இருந்து விலகிவிடலாம்.

இதுபோன்ற விளையாட்டுகள்  ஓய்வெடுக்கும் நேரத்தை வீனாக்கி மேலும் மன சுமையை நிஜத்தில் உண்டாகி கொள்கிறோம் .

       தற்சமைய தனிமையை போக்குவதாக இந்த ஆன்லைன் கேம்கள் சரியானதாக தோன்றும் இதுவே நமது  கல்வி  அறியாமையை உணர்த்துகிறது.


விளையாட்டில் ஈடுபடுபவர்களின் மனம் நிஜத்தில் சந்தோஷமடைவதில்லை, மனம் பாரம் அடைவதுடன் மூளையை தேவை இல்லாமல் இயக்குகிறது .ஒன்றிலிருந்து விடுபப்ட்டு இனொன்றுக்கு வருபவர்களுக்கு இது காத்திருக்கும் சுமை தான் .

தன்னை தாக்க வராத ஒன்றை ,இன்னும் சொல்ல போனால் உலகில் இயற்கையில் நிகழாது ஒன்று தன்னை தாக்கிவருவதாக கற்பனைசெய்து கொண்டு இதை தாக்குங்கள் என்று கூறும் இந்த கேம்கள் அல்லது கற்பனை உலகங்கள்  எந்த பயனும் தருவதில்லை அதை படைத்தவரை தவிர .


நிஜத்தில் வாழ்வதே நல்லது ,
கற்பனையுலகில் வாழ்வதற்கு எதற்கு
 உடல் உறுப்புக்கள் தேவை,அப்படியானால்  
கற்பனை செய்துகொன்டே இருக்கலாமே .

நன்றி 



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI