தற்கொலை எண்ணம் ஏன்? -WHY THE THOUGHT OF SUICIDE
தற்கொலை எண்ணம் ஏன் ?
article by ssg
துக்கம், மன கவலை,தாங்கமுடியாத பிரச்சனைகள் அனைத்துமே மனதை சோர்வாக்கி, நம்மை ஊரைவிட்டும் ,உடலைவிட்டும், உலகைவிட்டும் விடுதலை அடையவே தூண்டும். இந்த உலகில் காரணம் இல்லாமல் நடைபெறுகின்ற விஷயங்களையும் பெரியதாக எடுக்காமல்.அனைத்தையும் சுமந்து கொள்ளாமல் அதன் வழி செலவிட்டு பொறுமையாக செல்வதே சுலபமான வழியாகும் என்பது ஞானிகளின் கூற்றாகும் .
பிரச்னை யாருக்கும் பாரபச்சம் பார்ப்பதில்லை.உலகில் உள்ள அனைவரும் ஏதோ ஒருதுன்பத்தில் இருந்து மீண்டே வந்துள்ளனர். உங்கள் எதிரியும் கூட.என்னிடம் தான் உலகில் பெரிய பிரச்னை உள்ளது என்று எண்ணாதீர்கள். . பிறர் துன்பப்படுவது உங்கள் கண்களுக்கு தெரியவில்லை என்றே அர்த்தம்.விழித்துக்கொள்ளுங்கள் .
நம் மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் அது வேறு ஒரு இடத்திலோ, அல்லது வேறொரு நினைவிலோ, அல்லது ஒரு நபரின் கட்டுப்பாட்டில் உள்ளது தானே அர்த்தம் .இவற்றிலிருந்து விடுபடவே தான் நோக்கமும் ,பிடிவாதமும்.
வாழ்க்கையின் அனைத்தும் கேட்டவுடன் கிடைப்பதில்லை நடப்பதும் இல்லை வந்து சேரும் காலங்களில் வந்து சேர்ந்தே விடும் அதை பெறுவதற்கு தகுதியானவர்கள் முதலில் சோதனைகளை வெல்ல வேண்டும்.பாதியில் விட்டு சென்றாலும் தன்னை அறியாமலேயே வாழ்க்கை முடியும் வரை பின்தொடர்ந்தே வரும் .
மன சோர்வுகளை அனுபவிக்க வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் .நம்மை நிம்மதியாக வைத்துக்கொள்ளும் சக்தி நம்முளேதான் இருக்கிறது என்பதும் ஞானிகளில் கூற்று.
உறவுகளில் விரிசல் விழாது என்று நினைத்தாள் தவறு ,விரிசல்கள் நிஜத்தை காட்டுகின்றன .நமக்கு ஏற்படும் துன்பங்கள் வெறும் துன்பங்கள் மட்டுமே அவை நம்முடைய அடையாளம் அல்ல .ஏமாற்றம் என்பது நாம் பற்றற்று இருந்தால் நம்மை பாதிப்பதில்லை.உலகில் உள்ள அனைத்தும் இறைவனை முதலாக வைத்தே அமையப்பெற்றுள்ளது .தினமும் இறைவனை நினைத்தால் துன்பத்தை எதிர்த்து நிற்கும் சக்தியை பெறலாம் .
நம்மை காப்பாற்றிக்கொள்வது என்பது மிக கடினமான செயலும் அல்ல. உலகில் அனைத்து உயிர்களும் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள ஏதேனும் செய்துகொன்டே இருக்கவேண்டும் என்பது
அவசியம் அல்ல .
சில சமயங்களில் நம்மை காப்பாற்ற வேண்டிய கடமையில் உள்ளவர்களும் நமக்கு உதவி புரியாமல், நமக்கு நம்பிக்கை திரோகம் செய்வதும் உண்டு .
நம்மால் நடப்பவையை மாற்ற இயலவில்லை என்றாலும் . துன்பங்களை தாண்டி செல்லும் சக்தி நம்முளேயே இருக்கிறது.
அமைதியாக இருந்தாலே போதும். நடப்பவை நடக்கட்டும் .தயவு செய்து வாழ்க்கையை புரிந்துகொள்ளுங்கள்.
மிகவும் துன்பப்படும் காலங்களை சோதனைக்காலங்கள் என்றால் அந்த காலங்களில் நாம் நேர்மையாகவும் தன்னிலை இலக்காமலும் ,தடம் மாறாமலும் , அன்புடனும் இருப்பது அவசியம் அனைத்திற்கும் அடிப்படை இவையே .இவை அறிந்து கொண்டால் வந்த துன்பம் சுமையாகவே தெரியாது.
ஆயிரம் தடவை ஏமாற்ற பட்டால் என்ன?
ஒதுக்கப்பட்டால் என்ன ?
தோற்கடிக்க பட்டால் என்ன ?
அனைத்தும் நாம் எத்தனை சீக்கிரத்தில் உணர்ந்து கொள்கிறோம் என்பதை பொறுத்ததே தான் அமைகின்றன .
ஆயிரம் தடவை வீழ்ந்ததை எண்ணி கவலை கொள்வதே நாம் செய்யும் முதல் தவறு .நாம் வீழ்ந்த இடத்தில நாம் செய்த தவறு என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை திருத்தி கொள்ளும் வழியை அறிவதே வாழ்க்கை .
நேராத்தை சோக சிந்தனையில் வீணாக்காமல். நினைத்த வாழ்க்கையை வாழத்துவங்க வேண்டும்.ஏனெனில் மன சோர்வு சிந்தித்து கலைத்தால் தான் வர இயலும் .நிஜத்தில் உள்ள துன்பங்களை உலகில் உள்ள அனைவரை போலவும் நாமும் எதிர்கொண்டால் தான் உலகிற்கு
அடையாளமாகவும் ,சமூகத்திற்கு சேவகனாகவும் வாழ இயலும் .
நன்றி
Love reading your articles,more valuable and useful!
பதிலளிநீக்கு