தனிமையில் இருந்து வெளிவருவது எவ்வாறு -HOW TO FACE AND COME OUT OF LONELINESS

     

        "வாழ்க்கையில் அனைவரும் சந்திக்காமல் செல்லாத காலம் தனிமை காலம்." இந்த காலங்களில் நம்முடைய வளர்ச்சி என்பது நம்மை அறியாது உயர்ந்தே இருக்கிறது.நாம் தனிமையில் இருக்க ஆயிரம் காரணங்கள் நம் மனதில் தோன்றும்.ஆனால்,நிஜத்தில் தனிமை காலம் என்பது முயற்சித்து  தன்னை ஏதேனும் செயலில் அடையாளப்படுத்திக்கொள்ளவும்,தான் யார் என்று தெரிந்துகொள்ளவும் தேவைப்படுகிறது. நிஜத்தை வெளியிருந்து பார்க்கும் ஏக்கமும் மனிதனை தன்னை அறியாமல் இந்த காலத்தில் உட்படுத்திவிடுகின்றன என்பது எனது கருத்தாகும்.




       
"சிலருக்கு தனிமை வாழ்வில் சுதந்தரத்தை தந்து சென்றிடும் .
சிலருக்கு தனிமை ஞானத்தை தந்து செல்லும்.
சிலரை தனிமை துன்பத்தை தந்து சென்றுவிடும் .
சிலருக்கு இது பாடத்தை புகட்டி செல்லும்."



தனிமையை இனிமையாக மாற்றிகொள்ளவது அவசியமாகும்.  நம்மை மேன்படுத்துவத்தற்கும், சமூகத்திற்க்கு நன்மை செய்வதற்கும் பயன்படுத்திக்கொள்வது சிறந்த ஆலோசனையாகும்.

உங்களது திறமைகளை வளர்த்திக்கொள்ளுங்கள்,சக உறவினர்கள் நல்ல நண்பர்களுடன் உங்களது எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.போட்டிகளில் பங்குகொள்ளுங்கள்,நேரத்தை பிடித்த தொழிலில் அல்லது கலையில் செலவு செய்வது நல்ல எதிர்காலத்தை தரும்.

நல்ல குருவை தேடி சென்று தியானம் ,சமூக சேவை போன்ற வாழ்வை மேம்படுத்தும் துறைகளில் புகித்து கொள்ளுங்கள் .குருவிடம் பயிற்சி பெறுவதே சிறந்தது.
 
   தனிமையில் அமர்ந்தவர் அனைவரும் புத்தராக முடியாமல் போனாலும் நல்ல குரு இருந்தால் நிச்சயம்  இயலும் .

      தனிமையில் இருப்பது பிரெச்சனைகளை விட்டு விலகி இருக்கிறோம் என்று அர்த்தமல்ல. இப்போது வேண்டாம் என்று ஒதுக்கிப்போட்டுளோம் என்றுதான் அர்த்தம். பிரெச்சனைகள் எவரையும் எந்த சூழ்நிலையிலும் விட்டு வைப்பதில்லை. தனிமையில் இருந்தால் தப்பித்து விடலாம் என்று எண்ணவும்  வேண்டாம் .தனிமையில் குற்ற உணர்ச்சிகளும் வளர்த்திக்கொள்ள வேண்டாம் ,தனிமையில் நம்மை நாமே வளர்த்திக்கொள்ளத்தான் வேண்டும். இதுதான் உலகம் என்று வெறுத்துவிட கூடாது.
           
தனிமையை உபயோகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
              தனிமையான காலம் ஒருவர் வாழ்வில் நிச்சயம் துன்பத்தை தர வேண்டும் என்று வருவதில்லை ,தனிமை தன்னை தானே வருத்திக்கொள்ளவும் ஊக்குவிப்பதில்லை .
         
            உலகின் உண்மைகளை தனிமை காலங்கள்  வெளிச்சம் போட்டு காட்டிவிடுகின்றன.
             உலகில் இத்தனை நாள் நீங்கள் தேடி சென்றோ அல்லது இது தான் வாழ்க்கை என்று எதன் பின்னாடி சென்று இருந்தீர்களோஅதையும் விட சில வாழ்க்கை  உள்ளது  என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த தனிமை காட்டிவிடுகிறது .

           நாம் யார் என்று தெரிந்து கொள்ளவேண்டும் ,வாழ்க்கையே அன்பு என்று ஒன்றும் இல்லை அனைத்தும்  நல்லவை தீயவை அனைத்தும் கலந்தே உள்ளன என்பதை காட்டிடும் .
              தனிமை காலத்தில் உங்களை பற்றியும் உங்கள் குடும்பத்தினர் பற்றியும் ,சமூகத்தையும் வெளியிருந்து நோக்கித்தான் பாருங்கள் .
உறவுகள் ,உணர்வுகள் என்று அனைத்தையும் துறந்த ஞானிகளின் துறவு வாழ்க்கைக்கு தனிமையே இனிமை .பிற சூழல்களால் ஏற்படும் திடீர்  தனிமைகூட இறைவனை எண்ணினால் அல்லது ,வாழ்க்கையின் உண்மையை கற்று கொண்டால் மறைந்து விடும் .
              பிறர்க்கும் சமூகத்திற்கும் சேவை செய்வதில் நீங்கள் ஈடுபட சிறந்த காலம் தனிமை காலம்.

If you like reading my posts pls do go below and leave your precious comments  aNd views dont forget to subscribe.
        

நன்றி





கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI