ஆன்லைன் சாட்டிங் -எனது கண்ணோட்டம்
ஆன்லைன் சாட்டிங் தேவையா ?
மொபைல் போன் மூலம் தேவையற்று நேரத்தை வீணாகாமல் மற்றும் பிரியமான நண்பர்களுடன் சாட்டிங் மூலம் பேசாமல் இருந்து பல பயிற்சிகளையும் எடுத்து கொள்கைகளையும் பின்தொடர்ந்து மெதுவாக நிஜத்தில் வாழ துவங்குங்கள் இன்றிலிருந்து.
சக நண்பருடன் என்றும் தொடர்பில் இருப்பதே உண்மையான நட்பு
வீட்டில் தனிமையில் தவிப்பது,சோக உணர்வுகள் இவற்றையெல்லாம் ஆன்லைனில் மறைத்துவிடலாம் .நேரில் பார்த்தாலே ஒருவரின் சுமைகள் கண்களில் தெரிந்துவிடும் இதற்கு அவர்வாய்விட்டு கூட சொல்ல தேவை இல்லை நட்பு என்பது இவ்வாறே இருக்க வேண்டும்.
மிகவும் பிரியமான நண்பர்களாக இருந்தோம்,கால போக்கில் பிரியும் சூழ்நிலைகள் பின் திடிரென்று அவர்களை நேரில் சந்தித்து பேசவேண்டும் என்ற எண்ணம் அதனால் அவர்களின் மொபைல் நம்பரை டைரியில் தேடினேன் நியாபகத்தில் கூட இல்லை என்று சொல்ல கொஞ்சம் தயக்கம் தான்.பின் டைரியை தவறவிட்டேன் முகநூலில் மற்றும் வலைத்தளங்களில் தேடினேன்.எங்கும் கிடைக்கவில்லை.மனதில் ஆயிரம் எண்ணங்கள்,என்னுடைய நண்பரும் என் மொபைல் நம்பரை தொலைத்துவிட்டாரோ என்று எண்ணினேன். நேரில் சென்று பார்த்தேன் அவர்களது வீடு அதே இடத்தில தான் உள்ளது இன்னும் மாறவில்லை என்று அப்பொழுது தான் தெரிந்தது.அவரை நேரில் சந்தித்து பேசியதுதான் என் வாழ்வில் மீண்டும் ஒரு மாற்றத்தை உருவாக்கியது.அவர்களுக்கும் நான் மிகவும் அவசியம் என்றும் எனக்கும் அவர்கள் அவசியம் என்றும் எங்களது வாழ்க்கைசூழ்நிலை தீர்மானித்தது.எங்கள் சுகதுக்கங்களை தினமும் வீட்டிற்கு நேரில் சென்று பகிர்ந்துகொள்வோம். நான் அன்று அவர்களை நேரில் சந்தித்தது மற்றும் அவர்களின் அணைத்து மனச்சுமையை பங்கிட்டு கொண்டது தான் உண்மையான நட்பின் அடையாளமாக இருந்துவருகிறது.
நட்பின் அர்த்தத்தை மாற்றிய ஆன்லைன் சாட்டிங்
நிஜத்தில் பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றாலே போதும் அந்த நபரின் முக்கியத்துவம் எந்தளவிற்கு என்று தெரிந்து விடும்.
குட் மோர்னிங் ,குட் நைட் அனுப்புபவர்கள் எல்லோரும் நண்பர்கள் என்றால் உளப்பூர்வமான நண்பனை நாம் கடைசி வரையில் பார்க்க இயலாது.
யோசித்து பார்த்தல் அதிகம் சாட் செய்பவர்கள் மட்டுமே நிஜத்தில் தனிமையில் உள்ளனர்.
இதற்கு காரணம் அவருடன் பேசுபவர்களுக்கு நேரம் தேவை இல்லை ,கால் நடக்க தேவை இல்லை இலவசமாக சமயத்திற்கு பேசிக்கொள்வார்கள்.
நினைத்த போதெல்லாம் நெட்ஒர்க் மூலம் பேசி பழகிய நட்பு என்பது தேவைக்கேற்ற தற்சமைய தனிமையை போக்கும் நட்பாகும். நமக்கு மொபைல் போன் இல்லையென்றாலும் மற்றும் அதில் மட்டும் பழகி பேசுவதால் மட்டும் எதையோ இழந்தது போல் மனம் தனிமை உணர்வை அதிகம் எதிர்கொள்கிறது.நல்ல நண்பர்கள் என்றல் இவ்வாறு தான் என்று வருகிற காலத்தில் சொல்வதற்கு கூட நமக்கு புத்தகங்கள் தான் தேவைப்படும்.நமது வாழ்க்கையை நமது முன்னோர்கள் வழி நாம் கற்றுக்கொள்ளவில்லை என்றெய் தான் அர்த்தம்.
நண்பர்களை நேரில் சந்தித்து பேசாமல் இருப்பதால் ஒருவரின் கஷ்டங்கள் இனொருவருக்கு தெரியாது .பெயருக்கு மட்டுமே நண்பன் என்றாகிவிடும் அதாவது நமது தனிமையை தற்சமயம் போக்கிக்கொள்வதே நட்பு என்றாகிவிட்டது தற்போது.
இதுபோன்ற உறவுகளின் அர்த்தத்தை அறிந்து கொள்ள மற்றும் மேலும் நன்மையில் வளர்த்திக்கொள்ள நேரில் சந்தித்து உரையாடுவது அவசியம்.
நமக்கு முக்கியமானவர்களின் மறைவு அல்லது மிகவும் முக்கியமான செய்திகள்,பண்டிகை வாழ்த்துக்கள் மற்ற உபசரிப்புகள் அனைத்திற்கும் ஒவ்வொரு விருந்தினரை உபசரிக்கும் மற்றும் செய்திகளை பரிமாறும் முரை என்று இருந்தது.அனைத்தையும் சாட்டிங் உலகில் நாம் புகுத்தி வாழ்க்கையில் சில அடையாளங்களை மறந்துவருகிறோம்.
நட்பை துண்டிக்கும் ஆன்லைன் சாட்டிங்
அலட்சிய போக்காலும் சிலர் சில இடங்களில் மொபைல் போன் மீது உள்ள கவனத்தால் தங்கள் வாழ்க்கையை கூட இழக்கும் நிலையை அடைகின்றார்கள்.நெட்ஒர்க் சேவைகள் அளிக்கும் "அனாநிமிட்டி " ஏற்படும் துன்பங்களுக்கு முக்கிய காரணமாகும்.
அனொனிமிட்டி என்பது இங்கே நமது அடையாளத்தை மறைத்து பேசுவது மட்டும் என்று சொல்லிவிடமுடியாது நமது எண்ணங்களை மறைத்து பேசும் ஒரு முறை என்றெ கூறலாம்.மனம் அதிகம் பாதிக்கப்பட்டு வாழ்க்கையென்பதின் அழகை முழுவதும் ரசிக இயலாமல் முடிந்துவிடுகிறது பொய்யான நெட்ஒர்க் உறவுகளால்.
பெரிய பொறுப்புகளிலும் ,உறவுகளிலும் இருப்பவர்கள் தங்கள் நண்பரிடம் பேசிகொன்டே இருந்தால் என்னவாகும் ? சிந்தித்து பாருங்கள் ,நான் சொல்ல வருவது உறவுகளில் பொறுப்புகளில் இருப்பவர்கள் ..இவர்கள் யாருடைய உணர்வுகளையும் கவனிப்பதில்லை மென்போக்கான வாழ்க்கையையே வாழ்கிறார்கள் .
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இந்தமாதிரியான நெட்ஒர்க் எப்போதும் உதவாது .சில சமயங்களில் பிரெச்சனைகளை வரவழைப்பதும் ,இருக்கின்ற பிரெச்சனைகளை வளர்ப்பதும் இந்த சாட்டிங் நெட்ஒர்க்ஸ் .
நான் இங்கே சென்றேன் ,நான் நண்பர்களுடன் கொண்டாடினேன் ,நான் சாப்பிடுகிரேன் என்று நான் இதை எல்லாம் செய்கிரேன் என்று சக நண்பர்களுக்கு காட்டுவதில் அந்த நபரின் சுயநலம் மட்டும் வெளிப்படுகிறது, சக மாணவர்களை நேரில் சென்று சந்தித்து வெளியே சென்றுவந்ததையும் நேரில் சென்று பகிர்வதும் அவசியம்.ஒரு மனிதன் இனொருவரை உபசரிக்க வேண்டும் என்ற நாகரீகத்தை நமது பாரத மக்கள் நன்றெ அறிந்துவந்துள்ளார்கள்.அவற்றையெல்லாம் மறக்கும் நிலைமையை இந்த தொழிநுட்பக்கலாச்சாரத்தை கொண்டு நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது.தன்னை சுற்றி இருப்பவர்கள் மன நிலையம் புரிந்து, சுயநலமற்ற ஆசைகளை மட்டும் வளர்த்து கொள்ளும் மனிதரை காண இயலாது .
ஆன்லைன் சாட்டிங்கால் ஏற்படும் சில பாதிப்புகள் அதாவது சில பொய்யான வதந்திகளால் ,அரசியல் பேச்சுகளாலும்,தீவிரவாத மாற்று சமூக விரோத செயலுக்கும்,ஹாக்கர்கள் ,திருடர்கள் ,தவறான தொழில்களில் ஈடுபடுபவர்கள் என அனைவரும் தங்களை உட்படுத்திக்கொள்ள எளிமையான வழிகளை உருவாக்கி தருகிறது இந்த சாட்டிங் ஆஃப்கள் . இவற்றால் உறவுகளில் விரிசல் ,காதல்,மோகம் ,வெறுப்பு ,தகராறு போன்ற அனைத்தும் அப்பாவி பெண்கள் மற்றும் ஆண்களை குறிவைக்கின்றன. இதுபோல் சில அபாயங்கள் இருபாலினரையும் பாதிக்கிறது .இது அவர்களின் தன்னம்பிக்கையை இலக்க வழிவகுக்கும் .
அப்பறம் எதற்கு தலையை தொங்கவிட்டு கழுத்தில் கட்டியை வளர்த்துக்கொள்ள போகிறீர்கள் .அமைதியாய் அமர்ந்து காற்றை வாங்குங்கள் நிம்மதி கிட்டும் .
நிஜத்தில் வாழ எப்போது ஆரம்பிப்பீர்கள் என்று முடிவெடுத்து வாழ ஆரம்பியுங்கள்
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக