திருக்குறள் காட்டும் வழி வாழ்கை
அதில் காட்டும் வழிகளை நாம் பின்பற்றுவதால் மேன்மையடைவது நிச்சயம்.
ஆனால் ஏன் மக்கள் அதை படிப்பதில்லை என்றால். அதில் உள்ள குரல்களை மனப்பாடம் செய்ய வேண்டுமோ என்று எண்ணுகிறார்கள் .திருக்குறள் ஒரு வாழ்வியல் நெறியை காட்டும் நூலாகும்.
அதை நாம் மனப்பாடம் செய்ய அவசியம் இல்லவே இல்லை.
அதை புரிந்து கொள்ளவே தமிழ் அறிஞர்கள் அதை எளிமையாக சிலர் மொழிபெயர்த்துள்ளனர்.
நாம் அனைத்தையும் மனப்பாடம் செய்வதாலேயே அதில் வரும் கருத்துக்களை எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறோம்.
திருவள்ளுவர் அனைத்து மக்களுக்கும் எவ்வாறு வாழவேண்டும் என்பதை ஒவ்வொரு அதிகாரங்களில் விளக்கியுள்ளார்.
பொறாமை, கள்ளாமை, ஒழுக்கம் என மனிதனின் உணர்ச்சிகளால் மற்றும் அறியாமையால் விளையும் துன்பத்தையும் விளக்கியுள்ளார்.
உங்கள் வாழ்க்கையில் துன்பம் ஏதேனும் வந்தால்.
உங்களுக்கு துணை என்று யாருமில்லை என்றுநினைக்காமல் திருக்குறளை படித்துப்பாருங்கள்
உங்கள் ஞானம் வளரவும் உண்மையை புரியவைக்கவும் இந்த நூல் ஒன்று மட்டும் போதும்.
நல்ல கருத்துக்களையும், வாழ்வியல் முறைகளையும் அன்றைக்கே கூறியவர்களும் , அதைப்பின்பற்றவும், அவர்களை போல் ஞானிகளும் இன்று இல்லை.
மனித இனம் இவையனைத்தையும் பின்பற்றினாலே தான் பரிணாமம் அடையும்.
ஒரு ஒழுக்க மற்றும் அமைதியான சூழலில் வாழ இயலும். இதை பின்பற்றாமல் வாழ்வது மனித இனத்திர்கே அழிவை தரும் என்பதில் சந்தேகம் தேவையில்லை.
நன்றி