ஆசைகள் துறப்பது சிறந்தது

ஆசைகளை துறந்தவர்களை நாம் ஞானி என்று கூறுகிறோம்.
அவர்கள் ஏன் ஆசைகளை துறந்துவிட்டார்கள் என்றால் மனிதனின் ஆசைகள் என்றுமே போதும் என்று இருப்பதில்லை.
ஒன்றின் பின் ஒன்று இருந்துகொன்டே இருக்கிறது .
ஆசைகளை துறந்து வாழ கற்றுக்கொள்பவர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டம் என்பது பெரிதளவில் ஏற்படுவதில்லை.
நாம் எப்படிப்பட்ட ஆசைகளானாலும் சரி அவற்றை அனுபவித்தபின் நம் மனம் போதும் என்று சொல்வதில்லை என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.
நாம் நம்முள் இருக்கும் சக்தியை நேசிக்க ஆரம்பிப்போம்.
நம்முடைய ஆசைகள் நம்மை உயர்த்திக்காட்டுவதாலேயே அதை நாம் விரும்புகிறோம் .அப்படிப்பட்ட ஆசை நிறைவேறாவிடில் நாம் நம்மை தாழ்வாக நினைக்கத்துவங்குகிறோம்.
ஆசைகளை அடக்கி ஆள்வது சிறந்த பண்பாகும்.
நாம் நேசிக்க படவேண்டும் என்று எண்ணுவதும் ஆசைதான் அப்படிப்பட்ட ஆசையானது நிகழ்ந்தாலும் நம் மனம் போதும் என்று எண்ணுவதில்லை.
அன்பு என்பதும் தீராத ஆசைதான். ஏதன் மீதும் பற்றில்லாமல் வாழும் வாழ்க்கையே தன்னிலை அறிந்தவரின் சுயமாகும் .
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக